search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் தொட்டி"

    • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எம்.ஜி.எம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • படுகாயம் அடைந்த ராமபிரம்மம் குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், கோர்ரெகுண்டாவை சேர்ந்தவர் ராமபிரம்மம். இவரது மனைவி ரமாதேவி. மகன் ஹரிஷ் குமார் ஆகியோர் மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மூலம் விஜயவாடாவுக்கு செல்வதற்காக வாரங்கல் ரெயில் நிலையத்திற்கு வந்து ரெயிலுக்காக காத்திருந்தனர்.

    இதேபோல் ஏராளமான பயணிகளும் ரெயிலுக்காக அங்குள்ள பிளாட்பாரத்தில் நின்றனர்.

    இந்நிலையில் ரெயில்வே பிளாட்பாரத்திற்கு மேலே இருந்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென உடைந்து விழுந்தது.

    அதன் அருகில் இருந்த ராமபிரம்மம், அவரது மனைவி ரமாதேவி, மகன் ஹரிஷ் குமார் ஆகியோர் மீது விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    மேலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பயணிகளும் லேசான காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எம்.ஜி.எம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேற்கு வங்க பயணிகள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ரெயிலில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    படுகாயம் அடைந்த ராமபிரம்மம் குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு மத்திய ரெயில்வேயின் செகந்தராபாத் கோட்ட மேலாளர் அபய் குமார் குப்தா சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள திரு.வி.க பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அரக்கோணம், திருத்தணி, காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஆந்திர மாநிலம், சத்தியவேடு, திருப்பதி, காளகஸ்திரி, நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதனை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பயணிகளும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையப்பகுதி எப்போதும் பயணிகள் கூட்டமாக இருக்கும்.

    ஆனால் பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைத்து இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தற்போது கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பஸ்டிரைவர், கண்டக்டர்கள் குடிநீர் வசதியின்றி கடும் அவதிக்கு ள்ளாகி வருகின்றனர்.

    பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் தொட்டி வெறும்காட்சி பொருளாகவே காட்சி அளிக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் பஸ் நிலையத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலால் பஸ் நிலையத்தில் இருந்த முதியவர் ஒருவரும், பெண் ஒருவரும் மயங்கி விழுந்தனர். அவர்கள் குடிநீர் இல்லாமல் மயங்கி விழுந்து இருப்பது தெரிந்தது. அவர்களுக்கு மற்ற பயணிகள் முதல் உதவி அளித்து அருகில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்து குடிக்க வைத்தனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பயணிகள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இங்கு இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படாததால், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. கிராமத்தில் இருந்து வரும் கூலி தொழிலாளிகள் மற்றும் வசதி இல்லாதவர்கள் தாகத்துடன் தவிக்கின்றனர்.

    குறிப்பாக முதியோர், பெண்கள், சிறுவர்கள் சிலர் வெயிலின் தாகத்தால் மயங்கி விடுகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறை யினர் யூகலிப்பிடஸ் மரக்கன்று களை நட்டு பரா மரித்து வருகின்றனர்.
    • வனவிலங்குகள் நெல், கரும்பு, மணிலா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் பகுதியில் சிறுநாகலூர், கொட்டையூர், குடியநல்லூர், தியாகை, நின்னையூர், கூத்தக்குடி, வரஞ்சரம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளன. இந்த பகுதியில் ஆழ்வார் மலை காப்புக்காடு வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் கூத்தக்குடி காப்புக்காடு ஆகியவை சுமார் 7 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. காப்புக்காடுகளை தவிர மற்ற வனப்பகுதியில் வனத்துறை யினர் யூகலிப்பிடஸ் மரக்கன்று களை நட்டு பரா மரித்து வருகின்றனர். இந்த பகுதி களில் குரங்குகள், மான்கள், காட்டுப்பன்றிகள் , மயில்கள், மலை பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளுக்கு காட்டுப்பகு தியில் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகள் நெல், கரும்பு, மணிலா, உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன. மேலும் காட்டுப்பன்றி, குரங்கு போன்ற விலங்குகள் மீண்டும் காட்டுப் பகுதிக்குச் செல்லாமல் வயல் பகுதிகளிலேயே தங்கியும் தொடர்ந்து பயிர்களை முற்றிலும் சேதப்படுத்துகிறது.

    சிறுநாகலூர், குடியநல்லூர், தியாகை, கூத்தக்குடி ஆகிய சாலைகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது தண்ணீர் தேடி திடீரென சாலையை கடந்து செல்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வனவிலங்குகளின் மீது எதிர்பாராதவிதமாக மோதும் போது விபத்து ஏற்படுகிறது. இதேபோல் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர் வனவிலங்குகளின் மீது மோதுவதால் வனவிலங்குகள் பலத்த காயம் அடைகின்றன. இவ்வாறு அவ்வப்போது இந்த பகுதிகளில் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே விவசாயிகளின் பயிர் பாதுகாப்பு, ஏற்படும் விபத்து ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வனவிலங்குகள் வனப்பகுதியிலேயே வசிக்கும் விதமாக வனப்பகுதியின் நடுவே இயற்கை வனப்பகுதி அமைத்து அதில் வனவிலங்குகளுக்கு தேவையான பழ வகை மரங்களை நட்டு முறையாக பராமரிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் வன விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கீடு செய்யவேண்டும். அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும். மேலும் இந்த தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் நிரப்பினால் மட்டுமே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கமுடியும் என இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில் :

    கருங்கல் அருகே முள்ளூர் துறையை சேர்ந்தவர் சுஜின். இவருக்கும் குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியை சேர்ந்த மேரி வர்ஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    இதையடுத்து சுஜின் மனைவி வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஷகிப்சேன்டினோ (வயது 3) என்ற மகனும், 1½ வயதில் மகளும் இருந்தனர். சுஜின் மீன்பிடித் தொழில் செய்து வந்ததையடுத்து அவர் கடலுக்கு சென்று இருந்தார். வீட்டில் குழந்தைகள், மேரி வர்ஷா மற்றும் அவரது தாயார் இருந்தனர்.

    நேற்று மாலையில் மேரி வர்ஷா வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது மகன் ஷகிப்சேன்டினோ வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். வெளியே சென்றிருந்த மேரி வர்ஷா வீட்டிற்கு திரும்பியபோது மகனை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் குழந்தை ஷகிப்சேன்டினோவை அந்த பகுதி முழுவதும் தேடினர். எங்கு தேடியும் குழந்தையை காணவில்லை. இவர்களது வீட்டு பக்கத்தில் உள்ள வீடு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கிரகப்பிரவேசம் நடந்தது. அந்த வீட்டின் கேட் திறந்த நிலையில் இருந்தது. எனவே ஷகிப்சேன்டினோ அங்கு சென்று இருக்கலாம் என்று சந்தேகத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் காணப்பட்டது. தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது ஷகிப்சேன்டினோ தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு குளச்சலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதைகேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஷகிப்சேன்டினோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டிலில் மூழ்கி குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.
    • தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.

    வால்பாறை

    வால்பாறை மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவை அவ்வப்போது தேயிலை தோட்டம் மற்றும் ெதாழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    இந்த நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் மேல் பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகே காட்டெருமை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

    பின்னர் தண்ணீர் குடிப்பதற்காக அங்குள்ள தண்ணீர் தொட்டியின் அருகே சென்றது. அங்கு தண்ணீர் குடிக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக காட்டெருமை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.

    இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோரின் உத்தரவின் பேரில் வால்பாறை வனசரகர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த காட்டெருமையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டெருமையை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து அந்த தொட்டியின் பக்கவாட்டு சுவரை உடைத்து காட்டெருமையை மீட்கும் பணி நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8 மணியளவில் தொட்டிக்குள் தவறி விழுந்த காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் அதனை வனத்தில் விட்டனர்.

    • மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

     காங்கேயம் :

    காங்கேயம் நாட்டான்வலசு அருகே உள்ளது என். காஞ்சிபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35) , விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடிச்சென்ற போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தார். இது குறித்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விவசாயி பிரகாஷ் குளிக்க வரும் போது குடிபோதையில் இருந்துள்ளார்.

    தண்ணீர் தொட்டி நிறைய தண்ணீர் நிரம்பி இருந்தது. அதில் குளிக்கும்போது மூச்சு திணறி உயிர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • குழந்தை அஸ்வந்த் தனது வீட்டின் முன்பு குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.
    • போலீசார் சிறுவன் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மனைவி மற்றும் அஸ்வந்த் என்ற 1 ½ வயது மகன் உள்ளனர்.

    நேற்று சிறுவன் அஸ்வந்த் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் முன் பக்கத்தில் குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக அவன் தவறி விழுந்தான்.

    வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை காணாததால் பெற்றோர் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தான். அதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் விளையாடி க்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெத்தநாடார்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ×